திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாட்டில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை இலாபகரமானதாக மாற்றும் அரசாங்கத்தின் நிறுவன மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், திரிபோஷ லிமிடெட் நிறுவனம் இப்போது மீண்டும் வெற்றிகரமான ஒரு புதிய ஆரம்பத்தை செய்துள்ளது.

இதன் கீழ், நீண்ட காலமாக செயலிழந்திருந்த தொழிற்சாலை இயந்திரங்கள் மீண்டும் 24 மணிநேரமும் இயங்கத் தொடங்கியுள்ளன என்று நிறுவனத்தின் புதிய தலைவர் அமல் நிரோஷன அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்காக திரிபோஷா மீண்டும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தலைவரின் வழிகாட்டுதலின் கீழ், சத்தான மற்றும் சுவையான Cup Cake வகைகளை நிறுவனமானது அறிமுகப்படுத்த உள்ளது. சொக்லேட், வாழைப்பழம், வெண்ணிலா, ஸ்ட்ராபெரி மற்றும் மாம்பழ சுவைகளில் இவை தயாரிக்கப்படும்.

நுகர்வோர், ஜா-எலில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகிலுள்ள விற்பனை நிலையம் மூலம் இவை வாங்க முடியும் எனவும் தலைவர் தெரிவித்தார்.

Share this Article