நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட47 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில், கடற்படையின் வடக்கு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைகள் இந்தமீனவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் வந்த ஐந்து படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காககடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.