தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் இன்று (ஒக். 14) காலை நடந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.
மேலும், கசிந்ததாக கூறப்படும் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
ஏழு பேர் கொண்ட குழு கூட்டத்தின் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது, மேலும் பரீட்சையை மீண்டும் நடத்த தேவையில்லை என அந்த குழுவும் ஒருமித்த முடிவை எடுத்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.