யாழ்.வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் வைத்து தனியார் பேருந்து சாரதி மீது இன்று(ஜனவரி 10) அதிகாலை வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
முகமூடி அணிந்து உந்துருளியில் வந்தவர்கள் தனியார் பேருந்து சாரதி மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் படுகாயமடைந்த பேருந்து சாரதியை ஊடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
வாள்வெட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.