தடைகளால் எமது நிலையை மாற்ற முடியாது – வட கொரியா எச்சரிக்கை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வட கொரியாவிற்கு எதிரான தடைகளை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்கும் சர்வதேச நாடுகளின் கூட்டு அறிக்கையானது, தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறும் செயல் என வட கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக அந்த நாட்டின் கே.சி.என்.ஏ அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அந்த அமைப்பினால் இந்த வாரம் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், வட கொரிய தொழிலாளர்களைப் பயன்படுத்துவதையும், அந்த நாட்டுடனான இராணுவக் கூட்டாண்மையையும் தடை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் தட தீர்மானங்களை உறுப்பு நாடுகள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இது குறித்து வட கொரிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

“தடைகளும் அழுத்தங்களும் பலவீனமான நாடுகளுக்கு எதிராகச் செயல்படலாமே தவிர, வட கொரியாவிடம் ஒருபோதும் செல்லுபடியாகாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “அமெரிக்கா மற்றும் மேற்கத்தேய நாடுகளின் வழக்கமான இத்தகைய தடைகள் மற்றும் அச்சுறுத்தல்களால், அணுஆயுத நாடாக விளங்கும் வட கொரியாவின் நிலையை ஒருபோதும் மாற்ற முடியாது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட கொரியாவின் அணுஆயுதப் பரவல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை 2006-ஆம் ஆண்டு முதல் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றித் தடைகளை விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment