தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டவுடன்ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளை ஆரம்பிக்க தபால் திணைக்களம்முழுமையாக தயாராக உள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்கதெரிவித்துள்ளார்.
நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கொண்டவாறு அவர்தெரிவித்துள்ளார்.
சுமூகமான தேர்தல் நடைமுறையை உறுதிப்படுத்த தேவையான அனைத்துஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. அனைத்து வீடுகளுக்கும்உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க 8,000 தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தபால் வாக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பானமுறையில் பரிமாற்றுவதற்கு தபால் திணைக்களங்கள் கடமைப்பட்டுள்ளதாகபிரதி தபால் மா அதிபர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்