ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றன.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார காலம் இன்று (செப் 18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

அதற்குப் பின்னர், வேட்பாளர்களுக்கு ஆதரவாக எந்தவொரு தனி நபரோ, குழுக்களோ பிரச்சாரம் செய்வது, அல்லது ஊக்குவிப்பது தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது, நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலை உறுதி செய்யும் நோக்கில் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

“பிரசார காலம் முடிந்தவுடன், பொது பேரணிகள், விளம்பர பொருட்கள் விநியோகம், அல்லது வீடு வீடாக பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படாது” என்றார். மேலும், பிரச்சார செயல்பாடுகளை எதிர்த்து நடவடிக்கை எடுக்க போலீசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Share this Article