ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று புதன்கிழமை (டிசம்பர் 03) மாலை அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டம் மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார தெரிவித்தார்.