இன்று (டிசம்பர் 17) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், 10வது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்கிரமரத்ன தேர்வு செய்யப்பட்டார்.
புதிய சபாநாயகர் பதவிக்கான முன்மொழிவை பிரதமர் ஹரிணி அமரசூரிய வழங்கியதுடன், சபாநாயகத்தலைவர் பிமல் ரத்நாயக்க அதனை உறுதிப்படுத்தினார்.
10வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக இருந்த அசோக ரங்வல ராஜினாமா செய்ததை தொடர்ந்து, சபாநாயகர் பதவி காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.