செவ்வந்தியை அழைத்து வர நேபாளத்திற்கு விரைந்துள்ள அதிகாரிகள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நேபாளத்தில்  வைத்து கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை நாட்டுக்குஅழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையினர் இரண்டு முக்கியஅதிகாரிகள் நேபாளத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். 

பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன்தொடர்புடைய இஷாரா செவ்வந்தி  பல மாதங்களாகதலைமறைவாகியிருந்தநிலையில்,  நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைஅதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி, நேபாளத்தில் வைத்து இஷாரா செவ்வந்தியை கைது செய்து நாட்டுக்குஅழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு உதவுவதற்கானமேலதிகமாக  விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த இரு அதிகாரிகள் தற்போதுநேபாளத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இந்தநிலையில், குறித்த அதிகாரிகள் இன்று மாலை இஷாரா செவ்வந்தி மற்றும்அவரோடு இணைத்து கைது செய்யப்பட்ட  ஏனைய சந்தேகநபர்களுடன் நாட்டைவந்தடைவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள், நேபாள பாதுகாப்புப் படையினருடன்இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது இஷாரா செவ்வந்திகைது செய்யப்பட்டார். 

அவரோடு இணைத்து மற்றுமொரு பெண் உள்ளிட்ட நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.  அவர்களில் தற்போது பொலிஸ் தடுப்புக் காவலில்வைக்கப்பட்டு பிரபல பாதாள உலகக் குழு தலைவரான கெஹல்பத்தர பத்மேவின்நெருங்கி சகாவும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனது. 

Share this Article