செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றைய தினம் (செப்.05) புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில்மேலும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வுபணிகள் கடந்த 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம்12ஆவது நாளாகவும் அகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காகநீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், நேற்றைய தினம் 44 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 53 நாட்கள் முன்னெடுக்கப்பட்டஅகழ்வு பணிகளின் போது, நேற்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டஎலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 235 எலும்பு கூட்டு தொகுதிகள்முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை இதுவரையில் 240 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகளுக்காக நீதிமன்றம் அனுமதித்த 45 நாட்கள்இன்றைய தினம் சனிக்கிழமையுடன் நிறைவுறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.