செம்மணியில் 20 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞர்ஒருவர் நேற்று (ஆகஸ்ட02) வெள்ளிக்கிழமை காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 20 கிலோ 175 கிராம் கஞ்சாபோதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

யாழ். வளைவுக்கு அருகில் இளைஞர் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில்நடமாடுவதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசியதகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த அதிரடிப்படையினர்மேற்படி இளைஞரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில்வவுனியாவை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் விசேடஅதிரடிப் படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share this Article