செம்பியன்பற்றில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஆடுகளை. மேய்க்க சென்ற வேளை பற்றைக்காட்டினுள் மோட்டார் குண்டை அடையாளம் கண்ட நிலையில் அது தொடர்பில் மருதங்கேணி காவற்துறையினருக்கு அறிவித்துள்ளார்.

காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், மோட்டார் குண்டை அகற்ற கிளிநொச்சி நீதிமன்ற அனுமதியை பெற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share this Article