செப்டம்பர் முதல் யாழ்ப்பாணத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அரசாங்கம் முன்னெடுத்து வரும் விரிவான அபிவிருத்தித் திட்டங்கள் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், குறிப்பாக முல்லைத்தீவை மையமாகக் கொண்ட வட மாகாணத்தின் புதிய “தெங்கு முக்கோண வலையமைப்பு” அபிவிருத்தி நடவடிக்கைகள் செப்டம்பர் 2 ஆம் திகதி தொடங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது:
“இந்த ஆண்டு மக்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்களை அரசு செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் முன்னெடுக்கிறது. அதன் பகுதியாக யாழ்ப்பாண மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்படும். அதேபோன்று, யாழ்ப்பாண மக்கள் மாவட்ட செயலகத்தில் கடவுச்சீட்டு பெறும் போது எதிர்கொண்ட சிக்கல்கள் நீக்கப்பட்டு, இணையவழி வசதி ஏற்படுத்தப்படும். இதனுடன் இணைந்து மேலும் பல அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன” என்றார்.

Share this Article