உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணங்களை ஏற்க வேண்டாம் என்று மாவட்டச் செயலர்களுக்கு அறிவுறுத்தியமை தொடர்பாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதையடுத்து பல கட்சிகள் கட்டுப்பணத்தைச் செலுத்தி வருகின்றன.
இந்தநிலையில், நேற்று (ஜனவரி 10) பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், கட்டுப்பணங்களை ஏற்க வேண்டாம் என்று பணிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் இந்தச் சுற்றறிக்கை வெளியான சில மணி நேரத்திலேயே, சுற்றறிக்கை மீளப் பெறப்பட்டது.
இந்தநிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரிடம் நேரில் அழைத்து விளக்கம் கோரியுள்ளது.