இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்றஉறுப்பினர் நாமல் ராஜபக்ச தன்மீது அவதூறு பரப்பும் விதமாகக் கருத்துவெளியிட்டதாகக் கூறி, பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில்வட்டகலவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, நாட்டில் “போதைப்பொருள் அச்சுறுத்தலுக்குப்பின்னால்” நாமல் ராஜபக்ஷ இருப்பதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி நாமல் ராஜபக்சவின் சார்பில்சட்டத்தரணி சங்க கருணாரத்ன, பிரதி அமைச்சரிடம் இருந்து 100 கோடி ரூபாநஷ்டஈடு கோரி சட்டக் கடிதம் அனுப்பினார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சுனில் வட்டகலவின் சார்பில் சட்டத்தரணிமஞ்சுல பாலசூரியா, நாமல் ராஜபக்சவிடம் இருந்து 200 கோடி ரூபா நஷ்டஈடுகோரி கடந்த செப்.22ஆம் திகதி பதில் அறிவிப்புக் கடிதத்தை வெளியிட்டார்.
இந்த பின்னணியில் இந்த அவதூறு குற்றச்சாட்டுகளை இலகுவாகஎடுத்துக்கொள்ள முடியாது என்று வலியுறுத்திய நாமல் ராஜபக்ஷ, இன்று தாம்சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.