சுகாதார தொழிசங்கம் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

     

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் மே 28 வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின்கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

உத்தியோகபூர்வ சீருடை கொடுப்பனவிற்கு இணையாக ஏனையவற்றுக்குவழங்கப்பட வேண்டிய கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கைவெளியிடப்படவில்லை எனவும் விசேட கொடுப்பனவை அதிகரிப்பதற்கானசுற்றறிக்கை, 15 பிரிவினரை விடுத்து வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதாரதொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சானக்க தர்மவிக்ரமதெரிவித்தார்.

தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார துறையின் 72 தொழிற்சங்கங்கள் கடந்தநாட்களில் மாகாண மட்டத்தில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தன.

பொருளாதார நீதியை வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்குசுகாதார அமைச்சு தீர்வை வழங்குவதாகக் கூறியபோதிலும், அதனைநிறைவேற்றாமைக்கு  எதிர்ப்பு தெரிவித்து சுகாதார தொழிற்துறையைச் சேர்ந்த72 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்தன.

Share this Article