சீனாவால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உலர் உலணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று காலை (29) நடைபெற்றது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹுவெய் கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கினார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட ஆயிரத்து 320 பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டச் செயலர் க.மகேசன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, சீனத் துதரக அரசியல் விவகார அதிகாரி, யாழ். மாவட்ட மேலதிக செயலர் ம.பிரதீபன், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ். மாவட்ட தலைவர் கே.பாலகிருஸ்ணன் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.