வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன்உடுவில் பிரதேச செயலகம் கொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப்பெருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை மருதனார்மடம் வட இலங்கை சங்கீத சபைமண்டபத்தில் நடைபெற்றது.
உடுவில் பிரதேச செயலாளர் பா. ஜெயகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண பண்பாட்டலுவல்கள்அலகின் பிரதிப்பணிப்பாளர் லாகினி நிருபராஷ் அவர்களும், கௌரவவிருந்தினராக யாழ் மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் சுகுணலினிவிஜயரத்தினம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
அமரர் வேலையா அவர்களின் ஞாபகார்த்த அரங்கில் இடம்பெற்றஇவ்வாண்டிற்கான பண்பாட்டு விழாவானது பல்வேறுபட்ட கலை இலக்கியவிழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மூத்த கலைஞர்களுக்கான “ஞான ஏந்தல்” மற்றும்இளங்கலைஞர்களுக்கான இளங்கலைஞர் விருதுகள் என்பன அரசாங்க அதிபர்அவர்களால் வழங்கப்பட்டது.