சிரேஸ்ட ஊடகவியலாளர் நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர்  ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளையதினம் (மே30) மாலை 4.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில்நடைபெறவுள்ளது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் எற்பாட்டில் இடம்பெறவுள்ளஇந்நிகழ்வில், இலங்கை தொழில் சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், மற்றும் வடக் கிழக்கு ஊடக அமைப்புக்கள் என பலரும் பற்கேற்கவுள்ளனர்.

இதன்போது மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்டஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நிகழ்வுஅனுஸ்ட்டிக்கப்படவுள்ளதோடு, பின்னர் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டிய போராட்டமும் இடம்பெறவுள்ளது.

2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து சிரேஸ்டஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article