சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினத்தில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றைநடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் அணிதிரண்டு ஆதரவு வழங்குமாறுமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை மூல இந்த அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் ஆகஸ்ட் 30 அனுஷ்டிக்கப்படவுள்ளது.

வேதனைகளுடன், துன்பங்களுடன் பல ஆண்டுகளாக தங்களுடைய உறவுகளைத்தேடிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இலங்கையை பொறுத்தவரையில் காணாமல் ஆக்கப்பட்டோர் என்ற சொற்பதம்உருவாகக் காரணமானவர்கள் தங்களுடைய துரோகத்தின் வெளிப்பாடாகதமிழ்மக்களை வேதனைப்படுத்திக் கொண்டேயிருக்கின்றார்கள்.

சுமார் 15 ஆண்டுகாலமாக இன்னும் இதற்கு ஒரு தீர்வு இல்லை. இறுதிப்போரின்போது ஒப்படைக்கப்பட்டவர்களை காணாது படும் வேதனையில் ஏக்கத்துடன்இருக்கும் பெற்றோர்களில் சிலர் இறந்தும் விட்டார்கள் அதுகொடுமை.

இந்த நிலையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வடக்கில்யாழ்ப்பாணத்திலும், கிழக்கில் திருகோணமலையிலும் காலை 10 மணியாவில்மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளார்கள். இந்தபோராட்டம் வலுப்பெற அனைவரும் திரண்டு ஆதரவு வழங்குமாறுகேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Share this Article