சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஸ்தாபித்த ரோம் சாசனத்தில் இலங்கை கையொப்பம் இடவில்லை என்ற போதிலும், ஏன், எவ்வாறு, எதற்காக இலங்கை தொடர்பாக பாதிக்கப்பட்ட 200 பேர் முறைப்பாடு செய்துள்ளார்கள் என்பதை 200 பேரின் சாட்சியங்களின் அடிப்படையிலும் மற்றைய சாட்சியங்களின் அடிப்படையிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அவர் நேற்று (30) ஊடகங்களுக்கு வழங்கிய கேள்வி பதிலின் போது அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
கேள்வி :- இலங்கையில் இறுதி யுத்தம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள், இந்நாள் முக்கிய பிரமுகர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட 200 தமிழர்கள் சார்பில் என்ற Global Rights Compliance LLR (GRC) சட்ட நிறுவனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு நடத்துநருக்கு சமர்ப்பித்துள்ள ஆவணம் தொடர்பாக உங்கள் கருத்து என்ன? இது சாத்தியமா?
பதில் :- இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது நடைபெற்றது இனப்படுகொலை தான் என்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை தீர்மானம் ஒன்றை இயற்றியுள்ளது.