சர்ச்சைக்குரிய தடுப்பூசி விவகாரம் – ஆய்வக பரிசோதனையில் உறுதி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘தரமற்ற இம்யூனோகுளோபுலின்தடுப்பூசி‘ (Antibody Vaccines) தொடர்பான விசாரணையில், அவற்றில் மனிதஉடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரிய வகை பற்றீரியாக்கள் மற்றும் உப்புஇருந்தமை ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையில்உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகமஇன்று (ஜூன்19) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சுகாதாரஅமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள, தரமற்றஇம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகளை இறக்குமதி செய்த வழக்கு இன்றுநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்தத் தகவல்வெளியிடப்பட்டது.

குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக அரச சட்டத்தரணி இன்றுமாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்

Share this Article