புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோகரங்வல நியமிக்கப்பட்டுள்ளார்
பிரதமர் ஹரிணி அமரசூரிய, அசோக ரங்வலவின் பெயரைப் பரிந்துரைத்தார், அமைச்சர் விஜித ஹேரத் அதனை உறுதிப்படுத்தினார்.
அதன்படி, சபாநாயகராக அசோக ரங்வல ஏகமனதாக பெயரிடப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பிரதி சபாநாயகர், குழுக்களின் தவிசாளர் மற்றும்குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகிய பதவிகளுக்கான உறுப்பினர் தெரிவுஇடம்பெறவுள்ளது.
முதலாவது நாளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசனஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில்அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும். செங்கோல் சபா மண்படத்தில்வைக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றம் கூட்டப்படவேண்டிய நாள் மற்றும் நேரம்அடங்கிய ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிஅறிவிப்பு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் வாசிக்கப்படுவது முதலாவதுவிடயமாக சபையில் முன்னெடுக்கப்படும்.
காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் கூட்டத் தொடரையடுத்து முற்பகல் 11:30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கைபிரகடனத்தை சபையில் முன்வைத்து விசேட உரை நிகழ்த்தவுள்ளார். அரசியலமைப்பில் 33 (அ) உறுப்புரையின் படி பாராளுமன்ற கூட்டத்தொடர்ஒன்றின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சபையில்சமர்ப்பிப்பதற்கும் அரசியலமைப்பின் 33 (ஆ) உறுப்புரைக்கு இணங்கபாராளுமன்றத்தில் வைபவ ரீதியான அமர்வுகளுக்கு தலைமை தாங்குவதற்கும்ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகிறது.
அந்த வகையில் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பானவிளக்கமான கொள்கை பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்