சதொசவில் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் மேலும் சில அத்தியாவசியப்பொருட்களின் விலையைக் குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம்அறிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ கிராம் உளுந்தின் விலை 100 ரூபாவினால்குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ கிராம் உளுந்து 1,400 ரூபாவுக்கு விற்பனைசெய்யப்படவுள்ளது.

400 கிராம் நிறையுடைய லங்கா சதொச பால்மாவின் விலை 40 ரூபாவினால்குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 910 ரூபாவாகும்.

கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம்வெள்ளை சீனியின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய. கோதுமை மா கிலோவொன்று 180 ரூபாவுக்கும், வெள்ளை சீனிகிலோவொன்று 260 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.

வெள்ளை அரிசி கிலோ ஒன்று 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன்புதிய விலை 200 ரூபாவாகும்.

கீரி சம்பா கிலோ ஒன்று 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதியவிலை 258 ரூபாவாகும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share this Article