அனுமதியற்ற மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 21 தொடக்கம் 38 வயதிற்குட்பட்ட 07 பேரையும் 02 டிங்கி படகுகளையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – வெற்றிலைக்கேணி கடற்படைக்குட்பட்ட சுண்டிக்குளம் கடற்படையினர் இவர்களை கைது செய்துள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கட்டைக்காடு முள்ளியானை சேர்ந்தவர்கள் என்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீரியல்வளத்திணைக்கள அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.