பச்சிலைப்பள்ளி, புதுக்காடு கிராமத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான பகுதியில் அமைந்த குளத்தில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்றினால் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக பிரதேச மக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சம்மந்தப்பட்ட அதிகாரிளுடன் குறித்த பிரதேசத்திற்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர், குறித்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விரிவாக ஆராய்ந்து முடிவெடுக்கும் வரையில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் தொடர வேண்டாம் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டதுடன், மணல் அகழ்விற்கான அனுமதி வழங்கியமைக்கான ஆவணங்களின் பிரதிகளை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.