சட்டவிரோத சொத்துக்குவிப்பு – விசேட விசாரணை பிரிவு ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவிப்புக்கள் தொடர்பில்விசாரணை நடத்துவதற்காக சட்டவிரோத சொத்துக்குவிப்பு விசேட விசாரணைபிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இந்த விசேட விசாரணை பிரிவு பழைய பொலிஸ் தலைமையாக கட்டிடத்தில்நிறுவப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் (ஒக்.20) இவ் அலுவலகம் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் பணம் சொத்துக்கள் குவித்தல் தொடர்பில்விசாரணை நடத்தப்பட உள்ளது.

பணிப்பாளர் நாயகம் ஒருவரின் தலைமையின் கீழ் இந்த விசாரணை பிரிவுஇயங்க உள்ளதாகவும் பிரதி பனிப்பாளர் நாயகம் ஒருவரும் இந்தப் பிரிவிற்குநியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட 3 ஆண்டுகளுக்கு இந்த பிரிவின்பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதித்துள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் நிதி குற்ற விசாரணை பிரிவு ஆகியனவற்றின்சிரேஸ்ட பொலிஸ் மா அதிபராக அசங்க கரவிட்ட கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடதக்கது.

குற்றம் ஒன்றின் மூலம் உழைக்கப்படும் பணம் சொத்துக்கள் தொடர்பில்விசாரணை நடத்தப்பட உள்ளதுடன் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டசொத்துக்களை 30 நாட்களுக்கு தடை செய்யவோ அல்லது பறிமுதல்செய்வதற்கோ இந்த விசேட விசாரணைப் பிரிவிற்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் குவிக்கப்பட்ட சொத்துக்கள் வெளிநாடுகளில்காணப்பட்டாலும் இந்த புதிய சட்டத்தின் மூலம் அவை தொடர்பில் நடவடிக்கைஎடுக்கப்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Article