காரைநகர் பகுதியைச் சேர்ந்த, இரண்டு குழந்தைகளின் தாயான 36 வயது சுரேஷ்குமார் குலதீபா என்பவர் பூநகரி சங்குப்பிட்டி பாலம் அருகே சடலமாக மீட்கப்பட்ட கொலை வழக்கில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் இன்று (நவம்பர் 04) கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 12ஆம் திகதி, யாழ்ப்பாணம்–பூநகரி வீதியின் 18ஆவது மைல் கல் பகுதியில், பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கடலுக்குள் தள்ளப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கில், முன்னதாகவே யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு மருந்தக உரிமையாளரும் அவரது உதவியாளரும் பூநகரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், முக்கிய சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் ஒளிந்திருந்த இடத்தில் கைது செய்யப்பட்டதாகவும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவுக்கு செல்வதாகக் கூறி வீடு விட்டு புறப்பட்ட பெண், பின்னர் இவ்வாறு கொடிய முறையில் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.