2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்யும் விண்ணப்பங்கள் இன்று (ஜூலை 14) முதல் ஜூலை 28 ஆம் தேதி வரையில் ஏற்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் மொத்தமாக 237,026 மாணவர்கள் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.