கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழப்பு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகழக மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தவர் மீது கோல் கம்பம் வீழ்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நாவாந்துறை சென் மேரிஸ் வியைாட்டுக்கழக மைதானத்தில் நேற்று (ஜூலை 20) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது படுகாயமடைந்த நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 29 வயதுடைய யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை என்பவரே மரணித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸார் விசாரணைகளைமுன்னெடுத்துள்ளனர்.

Share this Article