சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடிச் சந்திக்கு அருகில் உள்ள பல்பொருள் அங்காடி உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருள்கள் திருடப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு(ஜூன் 16) பல்பொருள் அங்காடியின் மேற்கூரை வழியாக உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 3 லட்சம் ரூபா பணம், குளிர்பான வகைகள் மற்றும் பால்மா பைக்கற்றுக்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
அங்கிருந்த பாதுகாப்புப் கமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.