கெஹல்பத்தரவுடன் நடிகை பியூமி தொடர்பு..?

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தற்போது பொலிஸ் காவலில் உள்ள ஒரு குற்றவாளியான கெஹல்பத்தரபத்மேவுடனான உறவு குறித்து நடிகை பியூம் ஹன்சமாலியிடம் விசாரணைமேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பியூம் ஹன்சமாலி நேற்று (ஒக்.21) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்முன்னிலையாகி வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அவரது வாக்குமூலங்களை பதிவுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பில் இருந்த மேலும் பல மோடல் துறையில்இருந்தவர்கள் மற்றும் நடிகைகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் மேலும் பல மோடல்கள் மற்றும்நடிகைகளிடம் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article