குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை நேற்று(ஜூலை07) முதல் நாளாந்தசேவையில் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

காலை 5.15 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்பட்டு புறக்கோட்டையை காலை5:40 மணிக்கு சென்று பின்னர் 5:45 மணிக்கு புறக்கோட்டையில் இருந்துபுறப்பட்டு காங்கேசன்துறைக்கு மதியம் 12:45 மணிக்கு சென்றடையும்.

இந்த சொகுசு ரயில் சேவை இதற்கு முன்னர் சனி மற்றும்ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் தேவி புகையிரத சேவை காலை 6:40 மணிக்கு புறக்கோட்டையில் இருந்துபுறப்பட்டு மாலை 3:00 மணிக்கு காங்கேசன்துறையை சென்றடையும். முன்னர்புறக்கோட்டையில் இருந்து காலை 5:45 மணிக்கு இந்த யாழ் தேவி புகையிரதம்புறக்கோட்டையில் இருந்து புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இந்த குளிரூட்டப்பட்ட  சொகுசு புகையிரத சேவை காங்கேசன்துறையில்இருந்து நண்பகல் 1:50 மணிக்கு புறப்பட்டு மாலை 8:00 மணிக்கு கொழும்புபுறக்கோட்டைக்கு சென்றடைந்து பின்னர் மாலை 8:30 மணிக்கு கல்கிசையைசென்றடையும்.

Share this Article