குருநகரில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டிடங்கள் அகற்றும் முயற்சி அப்பகுதி மக்களின் எதிர்பினால் கைவிப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சபைக்குட்பட்ட குருநகர் பகுதியில் வடிகான்களுக்கும் மேலாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கடைகள் நேற்றைய தினம் (12) யாழ்ப்பாண நகர சபையினர் இடித்து அழிக்க பெக்கோ இயந்திரத்துடன் வருகை தந்த போதிலும் அப்பகுதி மக்களின் எதிர்ப்பினால் அம்முயற்சி கைவிடப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தின் பரிந்துரைக்கு அமைய பொலிஸாரின் பாதுகாப்புடன் மேற்குறித்த பகுதியில் இருக்கும் வீடுகள் மற்றும் கடைத் தொகுதிகளை அப்புறப்படுத்த மாநகரசபை ஊழியர்கள் வருகைதந்தனர்.
இதன்போது அப்பகுதி மக்கள்குறித்த சட்டவிரோத கட்டடங்களை அகற்ற தமக்கு உரிய காலம் வழங்கப்பட வேண்டுமெனவும் மழை காலத்தில் தாம் மாற்று வழிகளை ஏற்படுத்த முடியாது எனவும் தமக்கு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர்.
இதனையடுத்து மாநகர சபையினர் கால அவகசாம் வழங்கி அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.