குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் – உச்ச நீதிமன்றத்தில் மனு !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலம் ஊடாக, அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் பிரதிவாதியாகச் சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்

அரசாங்கத்தினால் சமர்பிக்கப்பட்டுள்ள “குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்” வாடகைக்குக் குடியிருப்பவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களினால் காணி உரிமையாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சட்டமூலத்தின் 01 முதல் 14 வரையான சரத்துக்கள், அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆம் பிரிவுகளையும், அடிப்படை மனித உரிமைகளையும் மீறுவதாக மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதற்கமைய, குறித்த சர்ச்சைக்குரிய சரத்துக்களை நிறைவேற்ற வேண்டுமாயின், அதற்குப் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளாலும் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமும் அனுமதி பெறப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்

Share this Article