காற்றின வேகம் அதிகமாகவும், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, சிலாபத்திலிருந்து புத்தளம்மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையிலிருந்துஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரைக்கு அப்பால்உள்ள கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகவும், சில நேரங்களில் மணிக்கு(60-70) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை, கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் மேற்கண்டகடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்

சிலாபத்திலிருந்து கொழும்பு வழியாக மாத்தறை வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு வழியாக திருகோணமலைவரையிலும் கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம்அவ்வப்போது மணிக்கு (50-55) கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாகபொத்துவில் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் சுமார் 2.5 மீ 3.0 மீ உயரம்கொண்ட அலைகள் எழும்பப்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Share this Article