முல்லைத்தீவு, கேப்பாபிலவில் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று (டிசெம்பர் 27) மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்துக்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் காணிகளின் உரிமையாளர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
54 குடும்பங்களுக்குச் சொந்தமான 71 ஏக்கர் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்குச் சொந்தமான இந்தக் காணிகளில் தற்போது படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மக்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.