கரடியனாறு பகுதியில் பெருமளவிலான ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்பாரிய ஆயுதக்கிடங்கு தோண்டப்பட்டு, அதிலிருந்து பெருமளவான ஆயுதங்கள், வெடிபொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைக்காடு பகுதியில்நேற்றுமுன்தினம் ( ஜூலை 10) விசேட அதிரடிப்படையினர் அகழ்வுப் பணியில்ஈடுபட்டபோது 20 ஆயிரம் ரி 56 ரக துப்பாக்கி ரவைகள், 300 கண்ணிவெடிகள், 38 வெடி மருந்துப் பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்தஇரகசிய தகவலின் அடிப்படையில் இந்த அகழ்வுப்பணி இடப்பெற்றது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு அமைய இந்த அகழ்வுப் பணிஇடம்பெற்றது.

Share this Article