கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கதிர்காம முருகன் ஆலயத்தின் கொடியேற்ற விழா ஜூலை 26ஆம் திகதிநடைபெறவுள்ளதை முன்னிட்டு, பக்தர்கள் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன்20) காலை காட்டுப்பாதை வழியாக பாதயாத்திரைக்கான பயணத்தைஆரம்பித்துள்ளனர்.

பக்தர்களுக்காக அமைந்துள்ள லகுகலை – உகந்தை வன பாதையின் கதவு, இன்றையதினம் காலை 6.00 மணியளவில் உகந்தை முருகன் ஆலயத்தில்நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிற்குப் பின்னர் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, அம்பாறைமாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள்கலந்து கொண்டனர்.

ஆரோஹரா” கோஷங்களுடன் பக்தர்கள் தங்களது காட்டுப்பாதை பயணத்தைஇன்று தொடங்கினர். கதிர்காம திருவிழா ஜூன் 26 அன்று கொடியேற்றத்துடன்ஆரம்பித்து, ஜூலை 11 இல் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

இதேவேளை, இன்று திறக்கப்பட்ட கதிர்காமம் காட்டுப்பாதை எதிர்வரும் 2025 ஜூலை 4 உடன் ம்மூடப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Article