கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் நடந்துள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றது.
இந்தச் சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. இரவு வேளை வீட்டுக்குள் கூரிய ஆயுதங்களுடன் புகுந்த மூவர் வீட்டிலிருந்த கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதுடன், மனைவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றுள்ளனர்.
கணவனும், மனைவியும் அபயக்குரல் எழுப்பியதை அடுத்து அவர்கள் இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய இருவரும் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.