ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெறுவதற்கு ஒரு செவிலி தாய் எவ்வாறுபார்த்து கொள்வாரோ அதே போல் இந்த கட்சியை நல்லதொரு கட்சியாகஉருவாக்கி இளையோரிடம் கையளிக்கவுள்ளேன் என தமிழ் மக்கள்கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன்தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேறலறையதினம் (ஜூலை20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார்.
எங்களுடைய கட்சி இதுவரை பல கஷ்டங்களை எதிர் கொண்டு தற்போதுநல்லதொரு நிலைக்கு வந்துள்ளது. எமது கட்சியை பதிவு செய்ய விட கூடாதுஎன்று கூட பலர் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அது கூடஎமக்கு சில காலங்களுக்கு முன்னரே தெரிய வந்துள்ளது.
இன்று எமது கட்சி பதிவு செய்யப்பட்ட பல இளைஞர்களை தன்னகத்தேகொண்ட கட்சியாக காணப்படுகிறது. நாங்கள் இதுவரையில் என்ன செய்தோம்என கேட்க கூடும். பல நாடுகளின் உயர்ஸ்தானிகர் , தூதுவர்கள் என பல்வேறுபட்ட தரப்பினர்களுடன் எமது பிரச்சனைகள் தொடர்பில் பேசி இருக்கிறோம். எமது கருத்துக்களை அவர்கள் உன்னிப்பாக செவிமடுத்து சிலதைசெய்துள்ளார்கள்.
இன்று உலக நாடுகள் மத்தியில் இலங்கைக்கான ஆதரவு குறைந்துள்ளது. பலநாடுகள் இலங்கைக்கான தமது ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகியுளள்னர்
தமிழர்களின் நிலங்களை திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புதொடர்பில் பல தரப்பிடமும் எடுத்து கூறி வெளிக்கொணர்ந்து உள்ளோம்.
அது மட்டுமின்றி எங்களுடைய பிரச்சனைகளை பற்றி சிங்களத்தில் பலவிடயங்களை கூறி வருகின்றோம். சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களின்பிரச்சனைகள் குறித்து சிங்கள மொழியில் எடுத்து கூறியுள்ளோம். இன்னமும்கூறி வருகிறோம்.
அதேவேளை எமது மக்களின் வாழ்வாதரத்தையும் மேம்படுத்தி வருகிறோம். அதற்கான உதவிகளையும் செய்து வருகின்றோம்.
எமது கட்சி இளையோரின் கட்சியாகும். அப்ப நீங்கள் ஏன் தலைவாராகஇருக்கிறீர்கள் என கேட்கலாம். குழந்தையை தாயொருவர் பிரசவிப்பதற்குமுன்னர் அந்த குழந்தை ஆரோக்கியமான பிறக்க வேண்டும் என்பதற்காக செவிலிதாயொருவர் கூட இருந்து அந்த தாயை பார்த்துக்கொள்வார்.
அதேபோலவே இந்த கட்சியை நல்ல நிலையில் வளர்த்து இளையோரிடம்கையளித்து விட்டு சம்பந்தன் போல போய் சேர்ந்து விடுவேன். என தெரிவித்தார்.