யாழ் மாவட்டச் செயலகத்தில் குடிவரவு குடியகல்வு வட பிராந்திய (கடவுச்சீட்டு) அலுவலகம் விரைவில் அமைக்கப்படும் என ஜனவரி31 இல் யாழ் வந்த ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இதேவேளை அலுவலகம் அமைப்பதற்கான இடவசதி ஏற்பாடுகளைச் செய்யுமாறுஅரசாங்க அதிபருக்கு சனாதிபதி நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிபர் சகிதம் ஜனாதிபதி மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்படவுள்ள அலுவலகத்தின் இடவசதியினைநேரடியாக ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.