இலங்கை கடலில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கதினை அதிகரிக்கும் நோக்குடன் வடகடலில் பாவனையற்ற பேருந்துகள் மூழ்கடித்த விவகாரம் தமிழக மீனவர்கள் மத்தியில் போராட்டங்களை மேற்கொள்ளும் அளவுக்கு சென்றிருக்கின்றது.
இலங்கை கடலில் பேருந்துகளை போடுவதால் இந்திய கடலில் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்றால் அதற்கான வாய்ப்புக்களே கிடையாது.
அவ்வாறெனில் ஏன் தமிழக மீனவர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் குதித்திருக்கின்றனர்? இவை வடபகுதி மீனவர்கள் மீதான அக்கறையா? எமது மீனவர்களின் நலன் சார்ந்ததா? என்பதை எடுத்து நோக்குவதற்கு முன்னர் குறித்த செயற்றிட்டம் தொடர்பில் ஆராய்வது பொருத்தமாகும்.
கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தினை அதிகரிப்பதற்கு ஏதுவான கடல் நீரடி பாறைகளுக்கு ஒத்த பொறிமுறையை செயற்கையாக உருவாக்கும் செயற்றிட்டங்கள் உலகில் பல நாடுகளில் இருக்கின்றன.
இவற்றுக்காக பல நாடுகளில் பாவனைக்கு உதவாத புகையிரதப் பெட்டிகள், பேரூந்துகள், கப்பல்கள், கட்டட இடிபாடுகள், கொங்கிறீற் துண்டங்கள் போன்றவற்றை கடலின் அடியில் போடுகின்ற செயற்பாடு உலக நாடுகளில் நீண்ட காலமாகப் நடைமுறையில் இருந்து வருக்கின்ற ஒன்று.
ஊலகின் வளர்முக நாடான அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் இந்தப் பொறிமுறை நீண்டகாலமாக இருந்துவருக்கின்றன.
இவற்றைவிட் இந்தியாவின் தமிழகத்தில பல ஆண்டுளாக இவ்வாறான செயற்கை இனப்பெருக்க பொறிமுறை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த இச் செயற்றிட்டம் பல தடவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவற்றைவிட பாவனைக்கு உதவாத பேரூந்துகளை ஏற்கனவே தென்பகுதி கடலில் மூழ்கடித்து இவ்வாறாக செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்ட போது தமிழக மீனவர்கள் எந்த வித எதிர்ப்பையும் காட்டவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இவ்வாறான நிலையில் தமிழக மீனவர்கள் வடகடலில் பேருந்துகளை இறக்கிய விடயத்தை கையில் எடுத்திருப்பது ஏன்? ஏன்ற கேள்வி பலரது புருவங்களை உயரவைத்திருக்கிறது.
தமிழக மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளில் இலாபமீட்டும் இடமாக இருப்பது இலங்கையில் வடபகுதி மன்னார் வளைகுடா முதல் கிழக்கு முனைவரையுமே.
இக்கடலினை நம்பி தொழிலில் பல ஆயிரம் தமிழக இழுவைப்படகுகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலில் ஈடுபடுகின்றன.
இவ்வாறான நிலையில் வடபகுதி கடலில் பேருந்துகளை இறக்குவதால் வடக்கு மீனவர்களுக்கு ஆதாயமே ஒழிய எந்தப்பாதிப்புமில்லை.
ஆனால் தமிழக இழுவைமடித் தொழிலில் ஈடுபடும் படகுகள் இச்செயற்றிட்டத்தால் பாரிய இடர்பாடுகளை சந்திக்க நேரும். பேருந்துகள் போடப்பட்ட பகுதிகளில் இழுவை மடிகொண்டு தொழிலில் ஈடுபடமுடியாது.
ஆவ்வாறு ஈடுபட்டால் அவர்களது பெறுமதிவாய்ந்த மடிகள் அவற்றில் சிக்கி சேதாரமடைந்தால் பல இலட்சங்களை இழக்க நேரிடும் என்பதுடன் அவற்றை மீட்பதும் கடினம்.
இயற்கையான பவளப்பாறைகளை அழித்து மீன்வளத்தை அழிக்கும் இழுவைப்படகுகளின் இழுவை மடிகளால் பலம்வாய்ந்த இரும்புகளை அழிக்கமுடியாது.
இதனாலட வடக்கு கடலில் தமிழக மீனவர்கள் தாம்மால் தொழிலில் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்பது ஒருபுறம் மேலதிகமாக பேருந்துகளை இறக்காது தடுப்பதற்கான உக்தியாகவும் தமிழக மீனவர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர் என்ற கருத்தே யதார்த்தமானது.
காலம் காலமாக வடபகுதி மீனவர்களின் கடல்வளம் தமிழக மீனவர்களால் சூறையாடி வருக்கின்றபோதும் இவற்றுக்கு இன்றுவரை நிரந்தரத் தீர்வுகள் எட்டப்படாத நிலையில் தற்போதய செயற்றிட்டம் தொடர்ந்தால் வடகடலில் இழுவைப்படகுகளின் வரவு முற்றாக நிறுத்தப்படும் நிலை வரவாய்ப்பிருக்கிறது.
ஜெ – நெடுந்தீவு