கடமைகளை பொறுப்பேற்றார் புதிய பொலிஸ்மா அதிபர்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணிபிரியந்த வீரசூரிய இன்று (ஓகஸ்ட் 14) தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அவர் கடமைகளை பொறுப்பேற்றதாகபொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர்,

தனது கடமைகளின் போது பொலிஸ் துறையின் கௌரவத்தையும்கண்ணியத்தையும் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்என்று குறிப்பிட்டார்.

பொலிஸ் துறையின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க தாம் பணியாற்றிவருவதாகவும், இதற்காக அனைத்து பொலிஸ் அதிகாரிகளிடமிருந்தும் உயர்செயல்திறனை எதிர்பார்ப்பதாகவும், புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணிபிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

ஒழுக்கமான பொலிஸ் துறையை நிறுவுவதே தனது ஒரே நோக்கம் என்றும், அதனை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, பொலிஸ்மா அதிபராக நியமித்த அனைவருக்கும் நன்றிதெரிவிப்பதாகவும் புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியஇதன்போது தெரிவித்தார்.

Share this Article