கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிவரை யாழ்ப்பாணக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 175 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் 15 படகுகள் அரசுடைமையாக்கப்பட்டதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான இறுதி மாவட்ட அபிவிருத்திக் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய அத்துமீறிய மீன்பிடியாளர்களின் வருகை குடாக்கடலில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறு வருகை தந்தவர்களில் கடந்த வருடம் இறுதி வரை 27 இந்திய மீனவப் படகுகள் கடற்படையால் கைது செய்யப்பட்டதுடன் 176 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில்,15 படகுகள் அரசுடைமையாக்கப்பட்டதுடன் ஒரு படகு மட்டும் விடுவிக்கப்பட்டதாக மேலும் தெரிவித்தார்.