கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் 14 மற்றும்15 ஆம் திகதிகளில் இட்ம்பெறவுள்ள நிலையில் திருவிழாவின் பூர்வாங்கஏற்பாடுகள் தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (மார்ச் 12) மாலை அரசாங்க அதிபர்அலுவலகத்தில் நடைபெற்றது .
இக் கலந்துரையாடலில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும்பக்தர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு, ஒலி, ஒளி வசதிகள், கடல் மற்றும் தரைப்போக்குவரத்து ஒழுங்குகள் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பாகஎடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பூர்வாங்க ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாககலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர்வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், இந்திய துணைத் தூதுவர்திரு இ.நாகராஜன், இந்திய துணைத் தூதரக அதிகாரி செல்வி சி. எஸ். ரம்மியா, வட மாகாணப் பிரதி கடற்படை கட்டளை தளபதி, பிரதம கணக்காளர், உதவிமாவட்டச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவப் பிரதிப்பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.