கச்சதீவு புனித அந்தோனியார் உற்சவம் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெற ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
இலங்கை மற்றும் இந்திய யாத்திரிகர்கள் பங்குகொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த உற்சவம் இம்முறை பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 28 ஆம் திகதி திருநாள் திருப்பலியுடன் திறைவுபெறவுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்பு இதற்கான ஏற்பாடுகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன்
இதற்கான முன் ஏற்பாடு மற்றும் உத்தியோக பூர்வ அறிவிப்புக்களிற்கான கலந்துரையாடல்களும் அடுத்த மாத ஆரம்பத்திலேயே இடம்பெறவுள்ளது.