கசிப்பு விற்பனை – பெண் கைது !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம், வட்டுகோட்டை பொலிஸ் பிரிவில் சுழிபுரம் மத்தி பராளாய் வீதிபகுதியில் கசிப்பு வியாபாரம் செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர்நேற்றையதினம் (ஜூலை14) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் கீழ் இயங்கும்யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்அடிப்படையில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் யாழ். மாவட்டபுலனாய்வுப் பிரிவினர் இணைந்து குறித்த கைது நடவடிக்கைமுன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 47 வயதான பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 10போத்தல் கசிப்புமீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் மல்லாகம் நீதிமன்றில்முற்படுத்தபடவுள்ளார்.

Share this Article