ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்திர சிறப்பு கொடுப்பனவு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அரசாங்க சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக மாதாந்திர விசேஷ கொடுப்பனவாக 3000 ரூபா வழங்கப்படும் என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு இன்று (ஜூலை 24) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.

சம்பள முரண்பாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை, 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்த விசேஷ கொடுப்பனவு வழங்கப்படும்.

அது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, “அரசு சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்க்க தனி குழு நியமிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் உள்ள சம்பள முரண்பாடுகளை ஒருங்கிணைந்து தீர்க்க இந்த குழு பணியாற்றும். இந்நிலையில், அந்த குழுவின் ஆலோசனையின் பேரில், செப்டம்பர் மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்கு 3000 ரூபாய் வழங்கப்படும். இதனால் சுமார் 7 லட்சம் பேர் பயனடைவார்கள்” என்றார்.

Share this Article